அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

Published Date: March 8, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இணையதளம்; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

கம்பிவடத் தொலைக்காட்சித் தொழிலாளர்கள் நலவாரியம் என்பதை தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம் என்ற பெயர் மாற்றம் செய்து 13.1.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தொழிலாளர்களும் உறுப்பினர்களுக்காக சேர்க்கப்பட்டு, கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவர் தன் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாரியத்தின் மூலம் 60 ஆயிரம் உறுப்பினர்களும் அவருடைய குடும்பத்தினர்களையும் சேர்த்து  2.50 லட்சம் பேருக்கு மேல் பயனடைவர். இதன் மூலம் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாரியத்தின் மூலம் திருமண உதவி தொகை, மகப்பேறு உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்கள், மகன், மகளுடைய கல்வி உதவித் தொகை தனி நபர் விபத்து உதவி ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாரியத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்யவும் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யவும் www.tnctvwb.in என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளலாம். நலத்திட்ட உதவி தொகையை நேரடியாக உறுப்பினர்களின் வங்கி கணக்கில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: DAILYTHANTHI